역대상 1장 타밀 OITCE
- 1 ஆதாம், சேத், ஏனோஸ்,
- 2 கேனான், மகலாலெயேல், யாரேத்,
- 3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா ஆகியோர்.
- 4 நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத்.
- 5 யாப்பேத்தின் மகன்கள்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.
- 6 கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
- 7 யாவானின் மகன்கள்: எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், ரொதானீம்.
- 8 காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.
- 9 கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள்: சேபா, திதான்.
- 10 கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
- 11 மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,
- 12 பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
- 13 கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
- 14 எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
- 15 ஏவியர், அர்கீயர், சீனியர்,
- 16 அர்வாதியர், செமாரியர், காமாத்தியர்.
- 17 சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக்கு.
- 18 அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.
- 19 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில் அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
- 20 யொக்தான் என்பவன் அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு,
- 21 அதோராம், ஊசால், திக்லா,
- 22 ஏபால், அபிமாயேல், சேபா,
- 23 ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.
- 24 சேம், அர்பக்சாத், சேலா;
- 25 ஏபேர், பேலேகு, ரெகூ,
- 26 செரூகு, நாகோர், தேராகு,
- 27 ஆபிராமாகிய ஆபிரகாம்.
- 28 ஆபிரகாமின் மகன்கள்: ஈசாக்கு, இஸ்மயேல் என்பவர்கள்.
- 29 அவர்களின் சந்ததிகள் இதுவே: நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்;
- 30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
- 31 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள். இவர்கள் இஸ்மயேலின் மகன்கள்.
- 32 ஆபிரகாமின் மறுமனையாட்டி கேத்தூராள் பெற்ற மகன்கள்: சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா. யக்க்ஷானின் மகன்கள்: சேபா, தேதான்.
- 33 மீதியானின் மகன்கள்: ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா. இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள்.
- 34 ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், ஈசாக்கின் மகன்கள்: ஏசா, இஸ்ரயேல்.
- 35 ஏசாவின் மகன்கள்: எலிப்பாஸ், ரெகுயேல், எயூஷ், யாலாம், கோராகு.
- 36 எலிப்பாஸின் மகன்கள்: தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்; திம்னா என்பவளுக்கு அமலேக்கு பிறந்தான்.
- 37 ரெகுயேலின் மகன்கள்: நாகாத், செராகு, சம்மா, மீசா.
- 38 சேயீரின் மகன்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான்.
- 39 லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம் என்பவர்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி.
- 40 சோபாலின் மகன்கள்: அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம். சிபியோனின் மகன்கள்: அயா, ஆனாகு.
- 41 ஆனாகின் மகன்: திஷோன். திஷோனுடைய மகன்கள்: எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.
- 42 ஏசேருடைய மகன்கள்: பில்கான், சகவான், யாக்கான். திஷானுடைய மகன்கள்: ஊத்ஸ், அரான்.
- 43 இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்: பேயோரின் மகன் பேலா; அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.
- 44 பேலா இறந்தபின்பு போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான்.
- 45 யோபாப் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.
- 46 உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.
- 47 ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.
- 48 சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.
- 49 சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.
- 50 பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள்.
- 51 ஆதாத்தும் இறந்தான். ஏதோமின் பிரதானமானவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,
- 52 அகோலிபாமா, ஏலா, பினோன்,
- 53 கேனாஸ், தேமான், மிப்சார்,
- 54 மக்தியேல், ஈராம். இவர்களே ஏதோமின் வம்சத்தலைவர்கள்.