역대상 3장 타밀 OITCE
- 1 தாவீது எப்ரோனில் இருக்கும்போது பிறந்த மகன்கள் இவர்களே: யெஸ்ரியேலைச் சேர்ந்த அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் மூத்த மகன்; கர்மேலைச் சேர்ந்த அபிகாயிலினிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாவது மகன்.
- 2 கேசூரின் அரசன் தல்மாயின் மகள் மாக்காளிடத்தில் பிறந்த அப்சலோம் மூன்றாவது மகன்; ஆகீத் பெற்ற அதோனியா நான்காவது மகன்.
- 3 அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாவது மகன்; தாவீதின் மனைவி எக்லாளின் பெற்ற இத்ரேயாம் ஆறாவது மகன்.
- 4 இந்த ஆறுபேரும் தாவீதிற்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே அவன் ஏழு வருடமும் ஆறு மாதமும் ஆட்சிசெய்தான். தாவீது எருசலேமில் முப்பத்துமூன்று வருடம் ஆட்சிசெய்தான்.
- 5 எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள்: சிமீயா, ஷோபாப், நாத்தான், சாலொமோன்; இவர்கள் நால்வரும், அம்மியேலின் மகள் பத்சேபாளுக்குப் பிறந்தார்கள்.
- 6 அங்கே இன்னும் இப்கார், எலிசூவா, எலிப்பேலேத்,
- 7 நோகா, நெப்பேக், யப்பியா,
- 8 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற ஒன்பதுபேரும் தாவீதின் மகன்கள்.
- 9 தாவீதின் மறுமனையாட்டியின் மகன்களைத் தவிர இவர்கள் எல்லோரும் தாவீதின் மகன்கள். தாமார் இவர்களின் சகோதரி.
- 10 சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; அவனுடைய மகன் அபியா; அவனுடைய மகன் ஆசா, அவனுடைய மகன் யோசபாத்.
- 11 அவனுடைய மகன் யோராம், அவனுடைய மகன் அகசியா, அவனுடைய மகன் யோவாஸ்,
- 12 அவனுடைய மகன் அமத்சியா, அவனுடைய மகன் அசரியா, அவனுடைய மகன் யோதாம்,
- 13 அவனுடைய மகன் ஆகாஸ், அவனுடைய மகன் எசேக்கியா, அவனுடைய மகன் மனாசே,
- 14 அவனுடைய மகன் ஆமோன், அவனுடைய மகன் யோசியா.
- 15 யோசியாவின் மகன்கள்: மூத்த மகன் யோகனான், இரண்டாவது மகன் யோயாக்கீம், மூன்றாவது மகன் சிதேக்கியா. நான்காவது மகன் சல்லூம்.
- 16 யோயாக்கீமின் மகன்கள்: அவன் மகன் எகொனியாவும், அவன் மகன் சிதேக்கியாவும்.
- 17 சிறைபட்ட எகொனியாவின் சந்ததிகள்: அவனுடைய மகன் செயல்தியேல்,
- 18 மல்கிராம், பெதாயா, சேனாசார், எக்கமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
- 19 பெதாயாவின் மகன்கள்: செருபாபேல், சிமேயி. செருபாபேலின் மகன்கள்: மெசுல்லாம், அனனியா; இவர்களின் சகோதரி செலோமித்.
- 20 இவர்களோடு இன்னும் ஐந்துபேர் இருந்தனர்: அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊஷாபேசேத்.
- 21 அனனியாவின் சந்ததிகள்: பெலத்தியாவும், எசாயாவும், ரெபாயாவினதும், அர்னானினதும், ஒபதியாவினதும், செக்கனியாவின் மகன்களும் ஆவர்.
- 22 செக்கனியாவின் சந்ததிகள்: செமாயாவும், அவனுடைய மகன்களுமான அத்தூஸ், எகெயால், பாரியா, நெயெரியா, செப்பாத் என்பவர்களான ஆறுபேர்.
- 23 நெயெரியாவின் மகன்கள்: எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் ஆகிய மூவர்.
- 24 எலியோனாயின் மகன்கள்: ஓதாவியா, எலியாசீப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி ஆகிய ஏழுபேர்.