욥기 25장 타밀 OITCE

  1. 1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:
  2. 2 “ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது; அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர்.
  3. 3 அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ? அவருடைய ஒளி யார்மேல் உதிக்காமல் இருக்கிறது?
  4. 4 அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி?
  5. 5 அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும், நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது,
  6. 6 பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும் மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!”