시편 121편 타밀 OITCE
- 1 மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
- 2 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, எனக்கு உதவி வரும்.
- 3 அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்; உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார்.
- 4 இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
- 5 யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
- 6 பகலில் சூரியனோ, இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது.
- 7 யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; அவர் உன் வாழ்வைக் காப்பார்.
- 8 யெகோவா உன் போக்கையும் வரத்தையும் இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.