시편 150편 타밀 OITCE

  1. 1 அல்லேலூயா, இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள்.
  2. 2 அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
  3. 3 எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.
  4. 4 தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்; கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள்.
  5. 5 கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.
  6. 6 சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. அல்லேலூயா.